கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி வீரவணக்க நிகழ்ச்சி கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் லண்டன் குணா, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கபிஸ்தலம் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் உறவழகன், விசிக மாவட்ட அமைப்பாளர் திராவிட நாத்திகன், சிபிஐஎம்எல் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு
அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை
அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் வேலு. யோகானந்தம், இலக்கு ஒன்றிய பொருளாளர் தியாகை முதல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் சம்சா ரமேஷ், கபிஸ்தலம் ஜெகதீசன், ஆட்டோ கலை, பொறியாளர் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் செல்லதுரை, சிபிஐஎம்எல் இபி.கணேசன், பாபநாசம் நகர பொருளாளர் பேண்ட் முருகானந்தம், சருக்கை அன்பழகன், விடுதலை தலை இலக்கியப் பேரவை அணி நதியா முத்தமிழ்செல்வன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.