உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஆர்.டி. மதன்குமார் ஏற்பாட்டில் இலவச பொது மருத்துவ முகாம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மனிதநேய உதயநாளாக திமுகவினர் கொண்டாடி வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் இன்று 06.12.2024 காலை இலவச பொது மருத்துவ முகாம் திருவொற்றியூர் ஸ்ரீ சாய் மஹாலில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாநில மீனவர் அணி துணைத் தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ, ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார் ஆகியோர் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் ஆரம்பாக்கம் கே.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ் கணேசன் மண்டல குழு தலைவர் மற்றும் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி செயலாளர் தி.மு. தனியரசு , திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.ம. அருள்தாசன், 5வது வட்ட மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் துணை அமைப்பாளர்கள் கேபிள் வேல்கணேசன், டி.ஜி.ஆர்.மணிவண்ணன்,சி.எஸ்.எஸ்.டி.சீனிவாசன், ஜி.கே.இனியவன்,
மற்றும் மாவட்டம் பகுதி வட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.