தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

                       பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில் குமரன்  நிகழ்விற்கு தலைமை தாங்கினார். நிகழ்வில்  பல்வேறு  போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *