திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தங்குடி மஞ்சு பாலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுத்து மகன் கோவிந்தராஜ். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் நான்கு பேர் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி பீமன் நகர் பகுதியை சேர்ந்த இலியாஸ்அலி மகன் சஜாத் அலி( 20), திருவையாறு திருமஞ்சன வீதி ஸ்டீபன் மார்ட்டின் (36) ஆகிய இருவரையும் வலங்கைமான் போலீசார் துரத்தி சென்று கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் நன்னிலம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மேற்பார்வையில் வலங்கைமான் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் நன்னிலம் கிரைம் டீம் தலைமை காவலர் மனோகரன், செந்தில் நாதன், எழில் குமார், தனி பிரிவு முதல் நிலைக் காவலர் அறிவழகன், சரவணன், காவலர் அருள் தாஸ், தனசேகரன், கல்யாணசுந்தரம் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் முன்னதாக கைதான குற்றவாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவையாறு புது அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வ கார்த்தி, அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கலையரசன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஒவ்வொருவர் பேரிலும் உள்ளது என தெரியவந்தது. அதனை அடுத்து குற்றவாளிகள் நால்வர் மீதும் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *