மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா கடந்த நவ. 10ம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளு – டன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். திருக்கார்த்திகை தினமான நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந் தது. நேற்று மாலை பொற்றாமரை குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
மீனாட்சி, சுந்தரேஸ்வர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.