ஸ்ரீவாஞ்சியத்தில்*எமதர்மராஜனுக்கு என்று தனி சன்னதி உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாஞ்சிநாத சாமி ஆலயத்தில்கார்த்திகை கடை ஞாயிறு தீர்தவாரி நிகழ்ச்சியில் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.
இந்தியாவிலேயே ஸ்ரீ எமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தன் ஸ்வாமிக்கும் தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் கோவிலாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருத்தலம் ஆயுள் விருத்தி வேண்டி இந்த ஆலயத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வாஞ்சிநாத சாமியையும் எமதர்மராஜன் சித்ரகுப்தரையும் வழிபட்டு செல்வது வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
திருவிழாவில் நேற்று திருதேரோட்டம் வெகு விமர்சையாக
அதனைத் தொடர்ந்து இன்று கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது.சுப்பிரமணியர் வள்ளி தேவசேனா மற்றும் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்ப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாராதனை நடைப்பெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் ஏழுந்தருள செய்யப்பட்டு
சுவாமி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளிலும் வலம் வந்து நட வாகன மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்ட பின்பு கோவிலில் உள்ளே அமைந்துள்ள குப்த கங்கை என்னும் திருக்குளத்தில் அஸ்ர தேவருக்கு பால் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குப்த கங்கையில் புனித நீராடினர். 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.