தமிழ் நாடு வன அலுவலர்கள் சங்கம் சார்பாக சாலை விபத்தில் மரணம் அடைந்த வன அலுவலர் குடும்பத்திற்கு அஞ்சலக வைப்பு நீதி வழங்கும் நிகழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் வனக்காப்பாளர் திரு.ராமசாமி 20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை முடித்து இருசக்கர வாகனத்தில் செம்பட்டி முதல் வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் கூலாம்பட்டி பிரிவு அருகில் செல்லும்பொழுது சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இன்று ₹ 7,00,000/- ஏழு லட்சம் ரூபாய் மரணம் அடைந்த.இராமசாமியின் இரண்டு குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியாக அஞ்சலகத்தில் செலுத்தப்பட்டது. அதற்கான ஆவணங்களை தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநிலதலைவர். கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்டதலைவர் ஆறுமுகம், கொடைக்கானல் தலைவர். சுரேஷ்குமார் வழங்கினார். இந்த நிகழ்வில் மாநில பொருளாளர் கார்த்தி, செயலாளர் புகழ் கண்ணன், பொருளாளர் சாமியப்பன், துணைதலைவர் திலகராஜ், இணை செயலாளர் சபரிநாதன், , செயலாளர் சங்கர் திருச்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, வத்தலகுண்டு வனச்சரக அலுவலர் இராம்குமார் மற்றும் திண்டுக்கல், கரூர், கொடைக்கானல், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.