திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான.முத்து சாரதா அவரது தலைமையில் நடைபெற்றது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தனர். இந்த அமர்வுகளின் மூலம் மாவட்ட முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்ற வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் என மொத்தம் 2604 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் தரப்பினர்களுக்கு தீர்வு காணப்பட்ட மொத்த தொகை 13,87,01,595/-ஆகும்.

இம்மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு 27 லட்சத்திற்குரிய காசோலை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் வேல்முருகன்,போக்சா நீதிமன்ற நீதிபதி, முரளிதரன் SC/ST நீதிமன்ற நீதிபதி, விஜயகுமார், குடும்ப நீதிமன்ற நீதிபதி, திரு.சரண், மகிளா நீதிபதி, தீபா, முதன்மை சார்பு நீதிபதி, கோகுலகிருஷ்ணன்,கூடுதல் சார்பு நீதிபதி, சோமசுந்தரம், சிறப்பு சார்பு நீதிபதி,திரிவேணி செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,ரங்கராஜ் முதன்மை உரிமையியல் நீதிபதி,சௌமியா மேத்யூ, குற்றவியல் நீதிமன்றம் எண் 1,ஆனந்தி, குற்றவியல் நீதிமன்றம் எண் 3, ஏராளமான வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *