தாராபுரம் அருகே மூலனூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 1 கோடியே 64லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்ட பணிகளை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்,

திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்ஆன இல .பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இத்தொடர் நிகழ்ச்சிகளில்
மூலனூர் ஊராட்சி ஒன்றியம் நைனாக்கவுண்டன்வலசில் ரூ. 11.00 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர், தொடர்ந்து பட்டத்திபாளையம் பொது வீதியில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பில் சாலையோர நடைபாதை பகுதிகளுக்கு பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணியை ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து பல்நோக்கு மையம் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தனர்

92.00 இலட்சம் மதிப்பில் மணலூர் சாலையில் இருந்து அய்யம்பாளையம் வரை செல்லும் தார்சாலையை புதுப்பித்துபலப்படுத்தும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மற்றும் திருப்பூர் நாலாவது மண்டல குழு தலைவர் இல பத்மநாபன் ஆகியோர்
ரூ. 41.35 இலட்சம் மதிப்பில் மாலமேடு பகுதியில் துணை சுகாதார நிலைய கட்டிடம் அமைக்கும் பணியை பூமி பூஜையுடன்துவக்கி வைத்தனர் தொடர்ந்து

ரூ. 4.00 இலட்சம் மதிப்பில் ஊத்தூர் தார் சாலை முதல் மயானம் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்து
ரூ. 3.00 இலட்சம் மதிப்பில் ஆனங்கூர் கதிர்வேல் கடை முதல் கோட்டார்பட்டி சாலை வரை பேவர் பிளாக் அமைக்கும் பணியை யும் ரூ. 4.00 இலட்சம் மதிப்பில் சம்மங்கரை பொது வீதியில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை துவக்கி வைத்து
புஞ்சைத்தலையூர், சின்னமருதூர், குமாரபாளையம், வேளாம்பூண்டி, எரசினம்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளில் சுமார் 10,000 மரக்கன்றுகளை நட்டு கொடுத்த அனிதா டெக்ஸ்காட் மற்றும் ஆறுமுகம் அறக்கட்டளை குழுமத்திற்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நாடு முழுவதும் 10 லட்சம் சாலையோர பூங்காக்களை அமைக்கும் திட்டத்திற்கு உறுதுணையாக அனிதா டெக்ஸ் காட் நிறுவனம் செயல்படுவதாக கூறி பாராட்டுகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து பால மேடு பகுதியில் அண்மையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு மதிய உணவு உடன் நிவாரண பொருட்களையும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ், எம் .குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து,மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *