R. கல்யாண முருகன்
விருத்தாசலம்
கிறிஸ்மஸ் குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொழில்பேட்டையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த பொம்மைகள் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மற்றும் மும்பை நகரங்களுக்கு விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.
குழந்தை இயேசு மரியாள் ஆடுகள் உட்பட 18 விதமான பொம்மைகள் 1600 முதல் 2000 வரை விற்பனை செய்கின்றனர்.வடகிழக்குப் பருவமடையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொம்மை வியாபாரிகள் மழை சற்று ஓய்ந்ததால் பொம்மைகள் தயாரிக்கும் பணியை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கிறிஸ்மஸ் தினம் இன்றும் குறைவான நாட்களே உள்ளதால் வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள் பொம்மைகள் வாங்ககுவிந்த வண்ணம் உள்ளனர்.
விருத்தாசலத்தில் தயாரிக்கும் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.