திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கீழ் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வசிக்கும் வகையில் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்புக்கார தெரு பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது. கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கட்டிடத்தில் வசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் பழுதடைந்து. அடர்ந்த காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டது அதனை அடுத்து பயன்பாட்டில் இல்லாத அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடம் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறியது. அப்பகுகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி பயன்பாட்டில் இல்லாத விஷத்தந்துக்களின் கூடாரமாக உள்ள வழுகு அடைந்த அலுவலக குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அலுவலக குடியிருப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி பயன்பாட்டில் இல்லாத பழைய குடியிருப்பு கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒன்றிய அலுவலர்கள் வசிக்கும் விதமாக பழுதடைந்த அலுவலக குடியிருப்பு கட்டிட பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.