வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
சார்பு நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமையில் பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி எஸ் எஸ் மஹாலில் நேற்று முன்தினம்
(21.12.2024 ) பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .இம்முகாமிற்கு துறையூர் சார்பு நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமை வகிக்க, மாவட்ட உரிமையியல் நீதிபதி
ஆர்.சத்தியமூர்த்தி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.நர்மதாராணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக முசிறி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் பகளவாடி ஊராட்சி மன்ற தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நீதிபதிகள் பிறப்பு முதல் இறப்பு வரை சட்டம் சார்ந்த பிரச்சனைகளை கையாள சட்ட விழிப்புணர்வுடன் பெண்கள் செயல்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women(NCW), ஜனவரி1992இல் உருவான இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும்.பெண்கள் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளை உருவாக்கி இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது.இதன் பணிகள்
அரசியல், சமயம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சனை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் போன்றவற்றில் மகளிரை காத்திட தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குடும்ப நலச் சட்டம்,பெண்கள் வன்கொடுமைகள் சட்டம். பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான சட்டம், கல்வியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு, பெண் பிள்ளைகளுக்காக அரசின் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு சென்று சேர வேண்டும்,தகுதி இருந்தும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும்,வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் இலவச வழக்கறிஞரை நியமனம் பெற்று தங்கள் வழக்கை நடத்திக் கொள்ளலாம்.சட்டம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தை பெண்கள் நாட வேண்டும்.தற்பொழுது தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவானது இந்தியா முழுவதும் இலவசமாக சட்ட ஆலோசனை பெறுவதற்காக 15100 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு சட்ட ரீதியான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகள், பிரச்சனைகள் சம்பந்தமாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். நிகழ்ச்சியின் நிறைவில் ஊராட்சி செயலாளர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையூர் வட்ட சட்டப் பணிகள் குழுவின் நிர்வாக அலுவலர் ஏற்பாடு செய்திருந்தார்.இதில் பகளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 320 பெண்கள் பங்கு பெற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்