கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் டாக்டர். அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமிதாவை கண்டித்து கபிஸ்தலம் பாலக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் உறவுகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் அரசாங்கம், சிபிஐஎம்எல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, நீலப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராம்ஜி, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜயகுமார், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் லண்டன் குணா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முத்தமிழ்செல்வன், விசிக ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் , சம்சா ரமேஷ், ஒன்றிய பொருளாளர்கள் தியாகை முதல்வன், வேலு யோகானந்தம், ஒன்றிய துணைச் செயலாளர் ஆட்டோ கலை, முற்போக்கு மாணவர் கழகத்தினர்கள் நவீன், தீனா, தனுஷ் ,குமார், சிவானந்தம், விஜயராகவன் ,ஆகாஷ், விக்கி ,அணிஸ், சுதாகர், வெற்றி, சபரி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கைகளில் கொடியுடன் அமித்ஷாவை பதவி விலக வேண்டுமென கோசமட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.