ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் ஏழு கல்லூரிகளில் இருந்து 95 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக வன்னிய பெருமாள் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.சுபாஷினி அவர்கள் கலந்து கொண்டு வணிகவியலில் செயற்கை நுண்ணறிவு எப்படி பயன்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.மாணவி செளமியாவரவேற்புரையாற்றினார்.
துணை முதல்வர் மஞ்சுளா தேவி தலைமையுரையாற்றினார்.முதல்வர் ஜமுனா சிறப்பு விருந்தினரை கெளரவ படுத்தினார்.வணிகவியல் துறை தலைவி அமுதா அறிமுக உரையாற்றினார் மாணவி மாலா நன்றி உரை கூறினார்.