வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி மாவட்டம் துறையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பில் எம்ஜிஆர் மன்ற நகர அமைப்பாளர் என் சங்கர் தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் (டிசம்பர் 24) அனுசரிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் கழக நிறுவனர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 37 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
துறையூர் எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பில் நகர அமைப்பாளர் துறையூர் என் சங்கர் தலைமையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவ படத்துடன் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சிலோன் ஆபீஸ் பகுதியில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் ஆஸ்பத்திரி ரோடு, திருச்சி ரோடு, பாலக்கரை, பெரம்பலூர் சாலை வழியாக மீண்டும் சிலோன் ஆபிஸ் வந்தடைந்தது இதனைத் தொடர்ந்து அங்குள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் இளங்கோவன், ராஜேந்திரன், கனகராஜ், வடிவேல், சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மண்டலச் செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் ரெங்கராஜ்,இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் அரவிந்த், நகர மாவட்ட பிரதிநிதி மருதமுத்து,இளைஞரணி நகர செயலாளர் விவேக், வார்டு கழக செயலாளர் அரவிந்த், மாவட்ட மருத்துவரணி இணைச் செயலாளர் ஜெய்ச்சரண், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வடிவேல், ஆயில் கடை பாலு, மாவட்ட தொழிற்சங்க வேணுகோபால்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சேகர்,
ஒன்றிய கழக நிர்வாகிகள்
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அன்பு பிரபாகரன், வழக்கறிஞர் அணி மனோகர், தங்கவேல், கலைவாணன் மற்றும் சொரத்தூர் ரமேஷ், கண்ணணுர் மணி, அவை தலைவர் ரவி மற்றும் ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.