திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் டி இ எல் சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பாவநாசர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை விழா நடைபெற்றது.
கிறிஸ்மஸ் ஆராதனை விழாவை மறைதிரு எஸ். ஜேக்கப் ஜெயராஜ் சபை குரு அவர்களால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி யில் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி ஜோதி பாய், ஆத்கள் ஐக்கிய சங்கத் தலைவர் தியாகராஜன்,சபையின் நாட்டாமை வில்லியம், பொருளாளர் பிலிப்பாக்கியநாதன், குருபாதம், இளைஞர் இயக்கம் டென்னிஸ், ராபினேசன், பெலிக்ஸ், கோவில் பிள்ளை தங்கத்துரை மற்றும் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சபை குரு மறை திரு எஸ். ஜேக்கப் ஜெயராஜ் அவர்கள் ஜெபமும், ஆசீர்வாதமும் செய்ய கிறிஸ்து பிறப்பின் விழா இனிதே நிறைவுற்றது. ஆராதனையில் சபை மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆராதனை ஏற்பாடுகளை உபதேசி யார் ரெ. இன்பராஜ் சிறப்பாக செய்திருந்தார். ஆலய அலங்கரிப்பை சபையார் செய்து இருந்தனர்.