விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன் கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது சாலைகளில் மழைநீர் தேங்கி பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வரும் அவல நிலையில் உயிர் பலி ஏற்படும் முன் சாலை சீர் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
குறிப்பாக நாள்தோறும் இந்த வழியில் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களை கூசும் அளவுக்கு எல்ஈடி பல்ப்புகளை முகப்பு விளக்கில் ஒளிர விட்டு வருவதால் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்து செல்வதாகவும் அதேபோல் கனரா வாகனங்களான லாரி பேருந்துகளும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது குறிப்பாக கனரக வாகனமான லாரிகள் அதிகாரம் பாரம் ஏற்றி வரும் பொழுது பள்ளத்தில் இறங்க அச்சத்தோடு வலதுபுறம் ஒதுங்கி செல்வதால் எதிர்புறத்தில் வரக்கூடிய பேருந்து ஓட்டுநர்களுக்கும் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது ஆகவே உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர், சாலையை சீர் செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.