தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை . கூட்டாம்புலி. குமாரகிரி. சிறுபாடு ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இந்த நான்கு பகுதிகளிலும் இன்னும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது
தேங்கியுள்ள மழை நீர் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பல வீடுகளில் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வெளியே சென்று உள்ளனர்
ஆனால் 15 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இந்தப் பகுதியை வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
அதுபோல அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு மழை நினர அப்புறப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளவில்லை அதுபோல அரசு அதிகாரிகள் எந்த ஒரு உதவியும் எங்களுக்கு செய்யப்படவில்லை ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம் பத்து நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் மொட்ட மாடியில் தங்கி உள்ளோம் என்று பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர் மழைநீர் தேங்கியுள்ளது
என்று அதிகாரிகளுக்கும் தெரியும் சட்டமன்ற உறுப்பினர் சண்முனகயாவுக்கு தெரியும் ஆனால் இன்று வரை மழை நீர் அப்புறப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சி மேற்கொள்ளவில்லை தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்
ஆகையால் தமிழக முதலமைச்சர் எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வந்து பார்வையிட வேண்டும் அதன் மூலமாக எங்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுது நாங்கள் பாதிக்கப்படுகிறோம். ஆனால் எங்களது பகுதியை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வது கிடையாது
எந்த ஒரு உதவியும் செய்யவில்லை ஆகையால் 15 நாட்களுக்கு மேலாக குமாரகிரி கூட்டம்புளி புதுக்கோட்டை சிறுபாடு ஆகிய பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மழைநீர் தேங்கியுள்ள பகுதியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் சென்று பார்வையிடுவாரா என்பதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது