தி. உதயசூரியன் வாடிப்பட்டி செய்தியாளர்.
செல் : 8098791598.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளமுடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மை தெய்வானை அம்மை உடனாகிய ஸ்ரீ வேலவன் திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி 1008திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக வேலவனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.
கோவில் வளாகப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உலக நன்மை
வேண்டியும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் எரளமான பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வேலவன் கோவில் விழா கமிட்டினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்..