இரா.பாலசுந்தரம், செய்தியாளர்-திருவாரூர்.
வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் ஆலய சனி மஹாப்பிரதோஷ விழா
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வேளுக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில் வரும் 28.12.2024 சனி பிரதோஷ பெருவிழா நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு ருத்ர யாகமும் அதனைத் தொடர்ந்து 4.30 மணிக்கு சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனையும் பிறகு பிரதோஷ நாயகர் உள்புறப்பாடு நடைபெற உள்ளது. இவ்வாலயத்தில் ஒரு பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசனம் செய்த புண்ணிய பலன் தரும் பரிகார ஸ்தலம் ஆகும்.