கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில் அனுமந்தபுரம் ஊராட்சியில் நெல்லுகுந்தி கிராம ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு A.தூரவாசன் விச ஒன்றியத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை:மணிபாலன் விளக்கவுரை C.P.ஜெயராமன் மாவட்டச் செயற்குழு.D.ராஜாமாவட்டக் குழு ஆகியோர் பேசினர். போராட்டத்தில் கறவை மாடுகளுடன் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
முக்கிய கோரிக்கைகளான பாலுக்கான கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் பத்து உயர்த்தி பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 45 ஆகவும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 54 ஆகவும் நிர்ணயம் செய்ய வேண்டும்.கால்நடைகளுக்கு வருடம் இருமுறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலவச தடுப்பூசி போட வேண்டும்.
வேளாண் விலைப் பொருட்களுக்கு விலை அறிவிப்பதை போல் ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு விலை அறிவித்திட வேண்டும்.ஆவினில் கொள்முதல் தினசரி ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும் அதற்கான கட்டுமானத்தை உருவாக்கிட வேண்டும்.மேற்கண்ட அடிப்படையில் கோரிக்கை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கறவை மாடுகளுடன் விவசாயிகள் பங்கேற்றனர்.