செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இன்றைய சூழலில் பண்டிகைகள் நமக்கு தருவது கொண்டாட்டமா…! திண்டாட்டமா…! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஆசியன் இன்சிடியூட் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கொண்டாட்டமே…! என்ற அணியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், குணகம்பூண்டி கணினி ஆசிரியர் ப.சுரேஷ் கற்க கசடற அமைப்பு நிர்வாகி ஆர்.பாஸ்கரன், ஆசியன் இன்சிடியூட் மாணவி எஸ்.சுஷ்மிதா ஆகியோரும், திண்டாட்டமே…! என்ற அணியில் சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம.சுரேஷ்பாபு, கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ், ஹாசினி பள்ளி முதுகலை ஆசிரியர் க.பூபாலன், ஆசியன் இன்சிடியூட் மாணவி வி.தரணி ஆகியோரும் பேசினர். நடுவராக டிவி புகழ் ஆர்.எஸ்.சிவக்குமார் பங்கேற்றார்.
இந்த பட்டிமன்றத்தை வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தொடங்கி வைத்தார். மேலும் இதில் சமூக ஆர்வலர்கள் பூங்குயில் சிவக்குமார், ரயில்வே தனசேகரன், மலர் சாதிக், வந்தை குமரன், வழக்கறிஞர் குமார் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.