விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு துவக்க விழாவும் சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையும் முன்னிட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் கிளைச் செயலாளர் வேல்முருகன் தலைமையிலும். நடராஜன். அசேன்பாஷா. சீதாபதி. பெருமாள். இவர்களின் முன்னிலையில் வட்டக் குழு உறுப்பினர் இமயம் சேகர் கட்சியின் கொடியேற்றி வைத்தார்
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சகாபுதீன் சிறப்புரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நல்லகண்ணு புகழ் வளர்க என்றும் பொதுவுடமை இயக்கம் வளர்க என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.