எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்
பெரம்பலூர் போலீஸ் லிமிட்டிற்கு உட்பட்ட பகுதியில் எஸ் ஐ பிச்சைமணி, தலைமையிலான குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அகதிகள் முகாமை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரபு, கவுல் பாளையம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் மகன் விஷ்ணு, பெரம்பலூர் ராம் தியேட்டர் அருகே உள்ள கம்பன் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரவீன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கி அனுப்பி வைத்தனர்.
கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்க்கோ தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் தெரிவித்து இருக்கிறார்கள்.