குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டிஜிபி ஷிமா அகர்வால், ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் ஆகியோர் உத்தரவு படி, எஸ்.பி. பாலாஜிசரவணன், டி.எஸ்.பி ராஜபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர், தாராபுரம் அடுத்த எரகாம்பட்டி வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இராஜகுமார், எஸ்.ஐக்கள் குப்புராஜ், பிரியதர்ஷினி ஆகியோர் எரகாம்பட்டி சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த ரோட்டில் மூட்டைகளுடன் வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 18 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்த ரமேஷ் (32) என்பதும், அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ரேசன் அரிசிகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கேரளா மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி சென்ற 18 டன் ரேசன் அரிசி. கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *