இரா. பாலசுந்தரம், செய்தியாளர் – திருவாரூர்
திருவாரூர் விஜயபுரத்தில் ஐயப்ப சுவாமி இலட்சார்ச்சனை விழா
திருவாரூர் விஜயபுரம் ஐ.பி கோவில் தெற்கு தெரு சிவன் கோவிலில் அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்ப ஆலயத்தில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி பிற்பகல் ஐயப்ப சுவாமிக்கு இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
மாலை ஐயப்ப பக்தர்களில் மண்டல பூஜை நடைபெற்றது.இதில் திரளான ஐயப்ப பக்தர்கள், ஆன்மீக பெருமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.