கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு நாள்.. மறைந்த தலைவனுக்காக தொண்டர் மொட்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் வயது 45 இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் இவர் 10 வயதில் இருந்தே விஜயகாந்தின் தீவிர ரசிகரும் தேதிமுக கட்சியின் பாபநாசம் ஒன்றிய பொருளாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தும் விதமாக அண்டக்குடி சாலையில் அமர்ந்து அவர் மொட்டை அடித்துக் கொண்டு பட்டை போட்டு , கையில் விஜயகாந்த் திருவுருவ படத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் கிராம மக்கள் கூடி நின்று விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு சோகத்துடன் அஞ்சலி செலுத்தினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.