பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறையின் சார்பில், பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, தேர்வுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் ஆகியோருக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தும் வகையிலும், எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். 2023-24 பால்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது, சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் ஆகியோர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிட அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தினசரி அதிகமாக பால் வழங்கக்ககூடிய சிறந்த பால் உற்பத்தியாளர்கள், தரமான பால் வழங்கக் கூடிய சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் ஆகியோர்களை தேர்ந்தெடுக்க திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட ஈச்சங்காடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் .பாலகிருஷ்ணன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000மும், வயலப்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் .ராஜேஸ்வரி என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000மும், திருவளக்குறிச்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் .வரதராஜ் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000-க்கான காசோலைகளையும்,
பேரளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் . சின்னசாமி என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000மும், பாடாலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் .வரதராஜ் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000மும், அ.மேட்டுர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் .ஜெயக்குமார் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000-க்கான காசோலைகளையும்,
நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த தொகுப்பு பால் குளிரூட்டும் மைய செயலாளர் .ஜெயராமன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000மும், அம்மாபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த தொகுப்பு பால் குளிரூட்டும் மைய செயலாளர் .ஜெய்சங்கர் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000மும், பசும்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறந்த தொகுப்பு பால் குளிரூட்டும் மைய செயலாளர் .ஜெயபால் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000க்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்து, பால் உற்பத்தி தொடர்பான பணிகளை இதுபோன்று சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆதர்ஷ் பசேரா மாவட்ட வருவாய் அலுவலர் .மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் .சு.கோகுல் துணைப்பதிவாளர் (பால்வளம்) எ.ஜெயபாலன், கூட்டுறவு சார்பதிவாளர் விஜயா, விரிவாக்க அலுவலர் காமராஜ், பால் உற்பத்தியாளர்கள், பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
