திண்டுக்கல் அருகே பிள்ளமாநாயக்கன்பட்டி பகுதியில் தை மாதம் தென் மாவட்டங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறக்கூடிய காளைகள் மற்றும் காளைகளை அடக்கக்கூடிய மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல், வாடிவாசல் வழியாக வெளியே வந்து அடக்க முயலும் இளைஞர்களிடமிருந்து திமிறி கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினர். அதேபோல் மாடுபிடி வீரர்கள் சீறிவரும் காளைகளை திமிலை பிடித்து அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.