கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே ஆட்டோ மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி-5 பேர் படுகாயம் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை……
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கேத்தனூர் அருகே சுரேஷ் என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் கேத்தனூரில் இருந்து பல்லடம் நோக்கி 3 பயணிகளுடன் வந்துள்ளார் அப்போது புலியப்பன் பாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பல்லடத்தில் இருந்து உடுமலை நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் பலமாக மோதியது இதில் ஆட்டோவில் பயணித்த நான்கு பேர் மற்றும் காரில் பயணித்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்
தொடர்ந்து வழியில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடம் விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
மேலும் ஆட்டோவில் பயணித்த சாரதா மணி, லாவண்யா, லட்சுமி மற்றும் காரில் பயணித்த சேதுபதி, ரீட்டா உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர் மேலும் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.