C K RAJAN
Cuddalore District Reporter..
94884 71235..
கடலூர் மாநகராட்சிக்குப்பட்ட தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் கூட்டு தூய்மை பணிகள் மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேவனாம்பட்டினம் கடற்கரைச் சாலையில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகள் நடைபெறுவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலையில் நேற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் ,
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக பெய்த மழை, பெஞ்சல் புயல் காரணமாக அனைத்து சாலைகளிலும் புல் மற்றும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள்,14 பேரூராட்சிகள், ஆறு நகராட்சிகளில் நேற்று கூட்டுத்தூய்மை பணிகள் மேற்கொள்ளப்
படுகிறது.
கடலூர் மாநகராட்சி பகுதியிலிருந்து 149 தூய்மை பணியாளர்கள், 335 தனியார் துறை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறை இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் அனைத்து இடங்களிலும் கூட்டுத்தூய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிவதை தவிர்த்து குப்பை தொட்டியில் மட்டும் போட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்திட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மேலும் தெருக்களில் சேகாரமாகும் குப்பைகளை அகற்றவும், பொது கழிப்பறைகளை தூய்மையாக தொடர்ந்து பராமரிக்கவும். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சரிவர தூய்மை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன்,மாநகராட்சி ஆணையாளர் மரு.அனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.