கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் திமுகவையும் ,தமிழையும் அசிங்கப்படுத்தியதாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை செயல்பட்டதாக கண்டித்து திமுக கவுன்சிலர் தலையில் 150 முட்டைகளை உடைத்து நூதன போராட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையை சேர்ந்த திமுக நிர்வாகி பாண்டியம்மாள் ராம்பிரகாஷ், வயது 48 ,
இவர் பேரூர் 3வது வார்டு கவுன்சிலராக இங்கு வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க செவி சாய்க்கவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
எனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசையும் தமிழையும், திமுகவையும் அசிங்கப்படுத்தி சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்ட போராட்டத்தை எதிர்த்தும் செயலை கண்டித்தும், அய்யம்பேட்டை காமராஜர் சிலை முன்பு அய்யம்பட்டி பேரூர் திமுக நிர்வாகி ராம் பிரகாஷ் தன் தலையில் 150க்கும் மேற்பட்ட கூமுட்டை முட்டைகளை உடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை சாலையில் சென்ற பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர் மேலும் தமிழ் வாழ்க என கோசங்கள் இட்டவாறு சென்றனர்.