நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040

தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் நடைப்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..
நாகை மாவட்டம் தலைஞாயிறில் உள்ள சீயோன் ஜெப ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா ஆலய போதகர் சந்திரமோகன் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது.
நள்ளிரவு பிரார்த்தனைகளும் 2024 ம் ஆண்டிற்க்கு நன்றி தெரிவித்து வழியனுப்பும் விதமாக கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.2025 ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 12 மணிக்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் கலந்துக்கொண்டு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று.புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாடைகளை வழங்கினார் .
இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன், அதிமுக ஒன்றிய செயலாளர் சௌரிராஜன், கவுன்சிலர் நாகராஜன், அஜீஸ்,வணிகர் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், ராஜேந்திரன்,சம்சுதீன் மற்றும் கண்ணன், பக்கிரிசாமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.