எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த திருவெண்காடு (புதன் ஸ்தலம்) சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு :-

நாடுமுழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் அமைந்துள்ளன இந்த தீர்த்தங்களில் புனித நீராடினால் கல்வி , வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம்,தொழில் முன்னேற்றம், திருமணத்தடை நீங்கும் உள்ளிட்ட சகலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டுசிறப்பாகவும் அமைதியாகும் விவசாயம் செழிக்கவும் பொதுமக்கள் ஆன்மீக பக்தர்களும் புதன் ஸ்தலத்தில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.முன்னதாக புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
திரவிய பொடி பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 11 வாகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி ,அகோரமூர்ததி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.