உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், மசூதிகளில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலையில் எதிர் மேட்டில் உள்ள ஸ்ரீ வருஷ விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பாக வழிபாடு நடத்தப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்வித்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி அருள்மிகு வருஷ விநாயகரை வழிபாடு செய்தனர்.