செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சொல்ல மறந்த கவிதை’ கவிதை நூல் வெளியீட்டு விழா பொட்டி நாயுடு தெரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தலைவர் பூங்குயில் சிவக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர். ஏ.பி.வெங்கடேசன், கவிஞர் அ.ஜ.இஷாக், தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பெ.எட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச துணைத் தலைவர் கவிஞர் தமிழ்ராசா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன் பங்கேற்று கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் முதல் பிரதியை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் பெற்றுக்கொண்டார். இந்த நூலை பற்றிய தொடக்க உரையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் நா.முத்துவேலன் வழங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், எழுத்தாளர் ஆசிரியை ரஷீனா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், வந்தை முன்னேற்ற சங்க தலைவர் வந்தை பிரேம், கவிஞர்கள் மா.கதிரொளி, வந்தை குமரன், செம்மொழி மன்ற நிர்வாகி கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை பேராசிரியர் முனைவர் உ.பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இறுதியில் நூலாசிரியர் கௌரி வெங்கடேஷ் ஏற்புரை நிகழ்த்தினார். உதய நிலா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் ஊர்ப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று நூல் பிரதிகளை பெற்றனர்.