திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை, பண்ணைப்பட்டி,கோம்பை பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த டாப்ஸ்சிலிபில் இருந்து சின்னத்தம்பி என்ற யானையும், முதுமையில் இருந்து கிருஷ்ணா என்ற கும்கி யானையும் வரவழைக்க பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து திலீபன் வனச்சரக அலுவலர் தலைமையில் வன உயர் அடுக்கு படை , ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு வனச்சரகங்களிருந்து அதிவிரைவு படை வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலர் காஞ்சனா மற்றும் D.F.O. ராஜ்குமார் அவரது அறிவுரையின்படி கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *