தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் ஆராய்ச்சிக்குழுவும் வணிகவியல் துறையும் இணைந்து ஹைதராபாத் இந்திய சமுக அறிவியல் ஆராயச்சிக் கழகத்தின் “Direct Benefit Transfer (DBT) Scheme: An Initiative For Inclusiveness (Gyp பயன்பலன் பரிமாற்ற திட்டம் உள்ளடக்கிய ஒரு முன் முயற்சி” என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் 06.1.2025 முதல் 07.01.2025 நடைப்பெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. சேசுராணி தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலர் முனைவர் R.சாந்தா மேரி ஜோஷிற்றா இல்லத்தலைமை அருட்சகோதரியும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் பாத்திமா மேரி சில்வியா வாழ்த்துரை வழங்கினார்கள்.
காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர். S. நேரு. திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியின் பொருளாதாரத்துறைத் தலைவர் முனைவர் P. ரவிச்சந்திரன், திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். G.ஜான் நிலக்கோட்டை அரசு கலைக் கல்லூரியின் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியர் T. தர்மராஜ், கேரளா மாநிலம், திருச்சூர் கிறிஸ்து கல்லூரியின் பேராசிரியா முனைவர். அருளர் பாலகிருஷ்ணன், மற்றும் கிரியாம்பட்டி தாடிக்கொம்பு ஸ்ரீவீ கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் P. சொரூபராணி ஆகியயோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நேரடி பலன் பரிமாற்றத்தில் வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். தமிழகத்திலிருந்து மொத்தம் 12 கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சுமார் 132 பேர் கலந்துக் கொண்டனர் இக்கருத்தரங்கில் சுமார் 20 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கருத்தரங்கினைக் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு தலைவர் முனைவர் சி. வேளாங்கன்னி மற்றும் வணிகவியல் துறைத்தலைவா அருட்சகோதரி முனைவர் A. ஸ்கலட் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் S. பவுல்ராணி இரண்டு நாள் கருத்தரங்க அறிக்கையை வாசித்தார், வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் M. ஆகினா பர்வீன் நன்றி நவில் இரண்டு நாள் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது