வலங்கைமான் சி. பி. ஜி. சங்கரா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சி. பி. ஜி. சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சி. பி. ஜி. அன்பழகன் தலைமை தாங்கினார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெய. இளங்கோவன்,துணைத் தலைவர் க. பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முதல்வர் வேலவன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் மாணவ, மாணவிகள் பாரம்பரியமாக வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தனர். மேலும் பள்ளி நுழைவு வாயிலில் வாழைமரம், கரும்பு கட்டுகள் கட்டப்பட்டிருந்தனர்.பள்ளியின் வாசல் தொடங்கி வளாகங்கள் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. மேலும் பள்ளி முழுவதும் கோலங்கள் போடப்பட்டு இருந்தது.
விழாவில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில், பொங்கல் விழா கொண்டாடப் பட்டது.
இதில் பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவதின் காரணங்களை செயல் விளக்கமாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.