எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
வைத்தீஸ்வரன் கோயில் புறவழிச்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி விபத்து. ஓட்டுநர் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் புதிதாக புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது இன்று காலை திருச்செந்தூர் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. புறவழி சாலையின் எடக்குடி வட பாதி பிரிவு மேல கரைமேடு அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் திருச்சி லால்குடி பகுதியில் சேர்ந்த அந்தோணி ராஜ் ( 50 )என்பவர் லேசான காயமடைந்தார். இவரை மீட்டு வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் காயம் ஏதும் இன்றி நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
அவர்கள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோயில் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சோழன், தனிப்பிரிவு காவலர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.