தமிழக அரசின் சார்பில்ஒவ் வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதே போன்று இந்த ஆண்டும் ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 856 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் படி முதல் கட்டமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி மதுரையில் விறுவிறுப்பாக நடந்தது. அந்த டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ் வொரு வீடு, வீடாக கொண்டு சென்று வினியோகம் செய்தனர்.
டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. மதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பை மேலபொன்னகரம் ரேஷன் கடையில் 58 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் வழங்கி துவக்கி வைத்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தினமும் முற்பகல், பிற்பகலில் தலா 150 முதல் 200 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பிற் கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.