கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாமி தரிசனத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய கர்நாடக துணை முதலமைச்சர் ஆர்.கே.சிவக்குமார் -க்கு காங்கிரஸ் கட்சியினர் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி .கே. சிவகுமார் வந்து இறங்கினார்.
அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் யோகநாதன் , கும்பகோணம் மேயர் சரவணன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், கும்பகோணம் முன்னாள் வட்டாரத் தலைவர் ரமணா வரதராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மற்றும் அக்கட்சியினர் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் கும்பகோணம் கோட்டாட்சியர் ஹிருத்யா விஜயன், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் , கிழக்கு காவல் ஆய்வாளர் சிவா செந்தில்குமார்,மற்றும் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் சிவகுமார் சாமி தரிசனத்திற்க்காக காரில் புறப்பட்டு சென்றார்.