
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்கரகாரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 92-வது திருப்பூர்கொடி காத்த குமரன் நினைவு தினமும், முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் நினைவு தினமும், தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம், திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமையில், வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கலியமூர்த்தி, டி .சி.டி.யு வலங்கைமான் நகரத் தலைவர் அகமது மைதீன் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு விருந்தினர்களாக வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாவட்ட பிரதிநிதி வலங்கைமான் ஆர். ஜி. பாலா ஆகியோர் மாணவர்களுக்கு கொடிகாத்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு படுத்தி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வலங்கைமான் கார்மல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருள் வழங்கப்பட்டது, காருமர் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ஆசிரியர் சியாமளா தேவி கொடிகாத்த திருப்பூர் குமரனின் தேசியப்பற்று, தியாகத்தையும் மாணவர்களுக்கு எடுத்துப் பேசி நினைவு பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டினார். முன்னதாக வலங்கைமான் நகரகாங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கலியமூர்த்தி, வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடிகாத்த திருப்பூர் குமரன், முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்துஅனைவரும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.