கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு…….
கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அவிநாசி பாளையத்தை அடுத்த கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட முதியன் நெரிசல் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்
தனது மனைவி மகன் மற்றும் தனது தாயார் முத்துமணி ஆகியோருடன் வசித்து வருகிறார் இன்று காலை தனது மனைவியுடன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற லோகநாதன் கோவிலுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார் காம்பவுண்ட் கேட் பூட்டப்படாமல் இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது அவரது தாய் முத்துமணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் இதுகுறித்து அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த அவினாசி பாளையம் போலீசார் முத்துமணியின் சடலத்தை மீட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஸ் அசோக் பல்லடம் டி எஸ் பி சுரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர் மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது
லோகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதே ஊராட்சிக்கு உட்பட்ட செமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் இன்று நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.