விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ்,ராமலிங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாகைகுளம்பட்டி கிராமம் கிராமத்தின் தொடக்கத்திலேயே குடிநிர் தேக்க தொட்டி,ரேசன்கடை, அங்கன்வாடி மையம், சுற்றிலும் குடியிருப்பு பகுதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் ஆனால் நடுவில் உள்ள மைதானத்தில்தான் இரவு நேரங்களில் பெண்கள் இயற்கை உபாதையை தீர்ப்பது வழக்கமாக உள்ளது
குப்பை கொட்டும் இடமும் இங்குதான்,அங்குள்ள குடியிருப்புவாசிகள்,மற்றும் ரேசன்கடை,அங்கன்வாடி,
ஊழியர்கள்,கூறுகையில்,பயங்கர துர்நாற்றம்,மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்,மழை பெய்தால் கழிவுநீர் கால்வாய் நிறைந்து தெருக்களில் ஆறாக ஓடும், பிரச்சனைகளை தீர்க்க பலமுறை முறையிட்டும் யாரும் செவிசாய்ப்பதில்லை,
சுகாதார வளாகம் இருந்தாலும் குறைந்த அளவு கழிப்பிடம் மற்றும் சுற்றிலும், புதர் மண்டி இருப்பதால் பாம்பு போன்ற விச ஜந்துக்களுக்கு பயந்தே பொதுவெளியை பயன்படுத்த வேண்டிய நிலை,உள்ளாட்சி நிர்வாகம், கருணை அடிப்படையில் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்பதே எங்களின் நீண்டகால எதிர்பார்ப்பு என்றனர்.