வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
கரட்டாம்பட்டியில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய புலிவலம் போலீசார்
திருச்சி ஜன-12
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி பேருந்து நிலையத்தில் (09/01/2025) பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை புலிவலம் காவல்துறையினர் பள்ளி மாணவர்களிடையே
ஏற்படுத்தினர்.
அப்போது பேசிய காவல் ஆய்வாளர் ரகுராமன், பள்ளியில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், ஆசிரியர்களை மதிக்க வேண்டும்,சக மாணவர்களிடையே ஜாதி மத பாகுபாடு பார்க்காமல் நட்புடன் பழக வேண்டும்.நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு நன்கு படிக்க வேண்டும்.கல்வி மட்டுமே நமக்கு நல்ல மரியாதையை பெற்று தரும்.ஆகவே நன்கு படித்து பெரிய அதிகாரிகளாக ஆக வேண்டும்.படிக்கும் வயதில் நன்கு நல்லொழுக்கத்துடன் படித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
யாராவது பெண்கள் ஆகிய நம் மீது தேவையில்லாத இடங்களில் கை வைத்தாலோ பாலியல் தொல்லை கொடுத்தாலோ அதை உடனே பெற்றோரிடம் தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அல்லது பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக 181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.
இதில் உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் வடிவேல், சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றி அறிவுறுத்தினர்.பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியை உடன் இருந்தனர்.