பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் வள்ளி தலைமையில்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி தலைமையில் அரசு ஊழியர்கள் பொங்கல் வைத்துகொண்டாடினர் இதையொட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வண்ணக் கோலமிட்டு பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்கப்பட்டது
அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாட்சியர் வள்ளி பரிசு பொருட்களை வழங்கினார்