தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இராஜராஜ சோழன்
மணிமண்டபத்தில் துவக்கி மன்னர் சரபோஜி கல்லூரி வரை போதைக்கு எதிராக வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், சிறுவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் துவக்கி வைத்தார்.
பேரணியின் முடிவில் பயிற்சியாளர் மணிகண்டன் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் நன்றி கூறினார்.