திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தினசரி நாள்காட்டி வழங்குவது வழக்கம், இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி நாள்காட்டி உடன் வலங்கைமான் வர்த்தகர் சங்க 2021-ஆம் ஆண்டுக்கான டைரியம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வர்த்தக சங்க கௌரவ தலைவர் என். பரதாழ்வார் தலைமையில், வர்த்தக சங்க செயலாளர் ராயல் கோ. திருநாவுக்கரசு முன்னிலையில், வர்த்தக சங்கத் தலைவர் கே. குணசேகரன் வெளியிட, வலங்கைமான் சரக காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் வர்த்தக சங்க பொருளாளர் எஸ். புகழேந்தி, துணைத் தலைவர் என்.மாரிமுத்து , இணை செயலாளர்கள் எஸ். சிவசங்கர்,ஒய். யாகூப் சலீம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.