இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
பின்னவாசல் திரௌபதி அம்மன் வீதி உலா உற்சவம்
திருவாரூர் மாவட்டம் பின்னவாசலில் உள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில் 15.01.2025 மாட்டுப் பொங்கல் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.